என்னோட ஆசை இனி நிறைவேறாது! நான் சாகப்போறேன்.. உயரமான பள்ளதாக்கின் மரண விளிம்பில் நின்ற மாணவி! இறுதியில் நடந்த அந்த நெகிழ்ச்சி சம்பவம்... திக் திக் வீடியோ..!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாரைச் சேர்ந்த இளம்பெண், மருத்துவம் படிக்கும் கனவு நிறைவேறாது என்ற விரக்தியில் பருந்தும்பாறை சுற்றுலாத் தலத்தில் இருந்து குதிக்க முயன்றார். செப்டம்பர் 28-ம் தேதி காலை நடந்த இந்தச் சம்பவத்தில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அவரை பத்திரமாக மீட்டனர்.
பிளஸ் 2-வில் வணிகவியல் பிரிவைத் தேர்வு செய்ததால், இனி மருத்துவப் படிப்புக்கான NEET தேர்வை எழுத முடியாது என அந்தப் பெண் தவறாக நினைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், காலை 11 மணியளவில் பருந்தும்பாறையின் மிக உயரமான பகுதியான தாகூர் ஹெட்டுக்குச் சென்று பள்ளத்தாக்கில் குதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
புகைப்படக் கலைஞர் அளித்த தகவல்
தாகூர் ஹெட் பகுதியில் இருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், இளம்பெண் ஆபத்தான நிலையில் இருப்பதை கவனித்தார். உடனடியாக உள்ளூர் மக்களுக்கும் பீர்மேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் போலீசாரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
முதற்கட்டமாக போலீசார் அந்தப் பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசத் தொடங்கினர். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர் அவசரப்படாமல் மிகவும் நிதானமாகவும் கனிவாகவும் அவரிடம் பேசி ஆறுதல் கூறினார். எல்லாவற்றையும் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும், பயப்படத் தேவையில்லை என்றும் கூறி அவருக்கு தைரியம் அளித்தார்.
நிதானமான பேச்சால் மாறிய முடிவு
தொடர்ந்து நடைபெற்ற உரையாடலின் மூலம் இளம்பெண் படிப்படியாக சமாதானமடைந்தார். பின்னர் அவர் ஆபத்தான விளிம்பில் இருந்து மெதுவாக பின்வாங்கினார். இதையடுத்து தயார் நிலையில் இருந்த தீயணைப்புத் துறையினர் அவரை பாதுகாப்பாக மீட்டு கீழே அழைத்து வந்தனர்.
மீட்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தேவையான தொழில்முறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. அவரை போலீஸ் அதிகாரி கனிவுடன் சமாதானப்படுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இக்கட்டான நேரத்தில் பதற்றமின்றி பேசி இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்ட போலீசாரின் அணுகுமுறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
പീരുമേട് പരുന്തുംപാറയിൽ, ടാഗോർ പാറയുടെ മുകളിൽ കയറി ആത്മഹത്യാ ചെയ്യാൻ തുനിഞ്ഞ പെൺകുട്ടിയെ പീരുമേട് പോലീസ് അനുനയിപ്പിച്ച് സുരക്ഷിതമായി താഴെയിറക്കി.
📢 അടിയന്തിര സാഹചര്യങ്ങളിൽ സഹായത്തിനായി ഉടൻ വിളിക്കൂ : 112 pic.twitter.com/p69rXqr1OY— ജില്ലാ പോലീസ് മേധാവി ഇടുക്കി (@idukkidpc) September 28, 2026