ஃபேஸ்புக் லைவில் தற்கொலை... ஹைதராபாத் பெண் எடுத்த விபரீத முடிவு.? பதற வைக்கும் வீடியோ.!

ஃபேஸ்புக் லைவில் தற்கொலை... ஹைதராபாத் பெண் எடுத்த விபரீத முடிவு.? பதற வைக்கும் வீடியோ.!


hyderabad-woman-commits-suicide-on-facebook-live-what-h

ஹைதராபாத் சார்ந்த பெண்  கணவர் கொடுமைப்படுத்தியதால் பேஸ்புக் லைவில்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் நற்சார்பகுதியைச் சேர்ந்தவர் சனா இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவரது கணவர் ஹேமந்த் ராஜ்புட். தனது பேஸ்புக்கின் மூலம் நேரலையில் வந்த இந்த பெண் தன் கணவர் தன்னை 5 மாதங்களாக  கொடுமைப்படுத்தி வருவதாக  கூறினார். இதனைத் தொடர்ந்து நேரலையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தக் காட்சி  பேஸ்புக் லைவ் மூலம் அதனை கண்டு கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் சென்றிருக்கிறது.

India

இவரது தற்கொலை தொடர்பாக குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள் ஹேமந்த் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை தொடர்ந்து அவரது மனைவி  சனாவை கொடுமைப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். பேஸ்புக் லைவ் மூலம் நடைபெற்ற இந்த தற்கொலை சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட தமிழ்நாட்டைச் சார்ந்த பெண் ஒருவர் வாட்ஸ்அப் வீடியோ காலில் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.