இந்தியா

முதலில் செல்போன் கடைக்காரன்.! பின் அவனின் நண்பன்..! தறிகெட்ட தாயினால் 5 வயதில் துடிதுடித்து இறந்த மகள்.! உடல் சிதறி இறந்த கணவன்.!

Summary:

Hyderabad man kills himself after five years old daughter murdered by wife lover

தெலுங்கானாவில் தனது மனைவியின் முறையற்ற உறவு, மனைவியின் கள்ளகாதலனால் தனது 5 வயது மகள் கொலை செய்யப்பட்டசம்பவத்தால் மனமுடைந்த குழந்தையின் தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் போங்கிர் மாவட்டத்தில் வி.ஆர்.ஓ.வாக பணிபுரிந்து வந்தவர் கல்யாண ராவ். 37 வயதான இவர், தனது மனைவி அனுஷா மற்றும் மகளுடன் மாதங்களுக்கு முன் கட்கேசருக்கு குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில், அனுஷா அந்த பகுதியில் இருக்கும் கருணாகர் என்பவரை ஒரு மொபைல் கடையில் சந்தித்து அவருடன் நட்பை வளர்த்துள்ளார். இந்த உறவு சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

Photo: Kalyan Rao (Photo: Indian Express)

பின்னர் கருணாகர் தனது நெருங்கிய நண்பர் ராஜசேகர் என்பவரை அனுஷாவுக்கு அறிமுகம் செய்துள்ளார். இந்நிலையில் அனுஷாவும், ராஜசேகரும் நண்பர்களாக மாறி, அவர்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அனுஷா கருணாகரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால் கருணேக்கருக்கு ராஜசேகர் மீது கோபம் ஏற்பட்டது, அவரைக் கொல்ல முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த 2 ஆம் தேதி, அறுவை சிகிச்சை செய்யும் இரண்டு கத்திகளை வாங்கிக்கொடு, ராஜசேகரைத் தேடி அனுஷாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார் கருணாகர். ஆனால் அவரைப் பார்த்ததும், ராஜசேகர் தன்னை மறைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிக்க ஏதுவாக அனுஷா கருணாகரை தனது மகள் ஆத்யா இருந்த அறையில் தள்ளி பூட்டியுள்ளார்.

அறையை உடைத்துக்கொண்டு கருணாகர் ஆத்யாவின் அறைக்குள் சென்றுள்ளார். ஆனால் ராஜசேகர் அங்கிருந்து தப்பித்தநிலையில் கருணாகர் தனது கையில் இருந்த கத்தியின் மூலம் அனுஷாவின் 5 வயது மகள் ஆத்யாவின் தொண்டையை கத்தியால் அறுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்யும் முயற்சியில் தன்னைத்தானே குத்தியுள்ளார்.

இதனை அடுத்து ஆத்யா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பழநின்று பரிதாபமாக உயிரிழந்தார். கருணாகர் சிறிய காயத்துடன் உயிரிபிழைத்த நிலையில் ஜூலை 7 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் போலீசார் அவனை கைது செய்தனர்.

தனது மனைவியின் முறையாற்ற பழக்கம், தனது பாச மகளின் இழப்பு, இது இரண்டையும் தாங்கிக்கொள்ள முடியாத கல்யாண ராவ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement