இந்தியா

அட பாவி மனுஷா... கோழி குழம்புக்காகவா கட்டுன மனைவியை கொலை செய்த.!!

Summary:

கோழி குழம்பை சரியாக சமைக்காத மனைவியை கொடூரமாக கொலை செய்து கணவன் ஏரியில் வீசிய சம்பவம் பெரு

கோழி குழம்பை சரியாக சமைக்காத மனைவியை கொடூரமாக கொலை செய்து கணவன் ஏரியில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் முபாரக். இவரது மனைவி ஷெரின் பானு. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஷெரின் பானு மாயமான நிலையில் அவர்களது உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். 

ஆனால் பானுவின் கணவர் முபாரக் தனது மனைவி காணாமல் போனது குறித்து உறவினருக்கோ, பானுவின் பெற்றோருக்கோ எந்தவொரு தகவலும் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஷெரின் பானுவின் பெற்றோர் காவல் நிலையத்தில் முபாரக் மீது புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த முபாரக்கை கண்டுபிடித்து தீவிர விசாரணை நடத்தினர். 

அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவ தினத்தன்று ஷெரின் பானு வைத்த கறி குழம்பு பிடிக்காததால் இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோவத்தால் தனது மனைவியை கொலை செய்து ஏரியில் வீசி எறிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து முபாரக் கூறிய இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஏரியில் கிடைத்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து முபாரக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


Advertisement