குளித்துக்கொண்டு இருந்த மனைவி.. 'அதை' பாயவிட்டு., கணவனின் பரபரப்பு செயலால் பரிதாபமாக பறிபோன உயிர்.!

குளித்துக்கொண்டு இருந்த மனைவி.. 'அதை' பாயவிட்டு., கணவனின் பரபரப்பு செயலால் பரிதாபமாக பறிபோன உயிர்.!


husbad-arrest-for-killed-his-wife

குடிபோதையில் மனைவியை மின்சாரம் பாய்ச்சி கணவனே கொன்ற பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃப்ரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரா. இவர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், இவருக்கு எவ்வித வேலையும் இல்லாத காரணத்தால், எப்பொழுதும் குடிபோதையில் இருந்துள்ளார். மேலும், முழுவதுமாகக் குடித்து விட்டு வீட்டில் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மனைவி சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின் அவரது மனைவி குளிக்கச் சென்றபோது, குடிபோதையில் வந்த சுரேந்திரா, மனைவி குளிக்கும் பாத்ரூமிற்கு சென்று அவறது கழுத்தை நெரித்துள்ளார்.

haryana

அத்துடன் அவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலையும் செய்துள்ளார். இதனால் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்த போது, அந்த பெண் இறந்து கிடப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சுரேந்திராவின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.