இந்தியா

அடக்கொடுமையே.. மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவர்! சொன்ன காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

Summary:

அடக்கொடுமையே.. மனைவியிடம் விவாகரத்து கேட்ட கணவர்! சொன்ன காரணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் சண்டூஸ் கிராமத்தைச் சேர்ந்த நபருக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு குவார்ஸி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதியருக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அண்மையில் அந்த நபர் முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.

இதனால் வருத்தமடைந்த அப்பெண் இதுகுறித்து மகளிர் பாதுகாப்பு பிரிவில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் நான் தினமும் குளிக்கவில்லை என கூறி என் கணவர் விவாகரத்து கேட்கிறார். அவருடனான உறவை முறித்துக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. எங்களை சேர்ந்து வாழ வையுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து அந்த நபரிடம் விசாரித்தபோது, தனது மனைவி தினமும் குளிப்பதில்லை. அவரை குளிக்கச் சொன்னாலே சண்டை வருகிறது. என்னால் அவருடன் சேர்ந்து வாழ முடியாது எனக் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அந்த கணவன் - மனைவிக்கு மகளிர் பாதுகாப்பு பிரிவினர் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். மேலும் மனைவி குளிக்காததால் கணவர் விவாகரத்து கேட்ட வினோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement