உங்களின் ஆதார் தொலைந்துவிட்டதா?.. செல்போன் நம்பர் வைத்து ஆன்லைனில் மீட்டெடுப்பது எப்படி?.. விபரம் இதோ.!

மத்திய அரசின் அடையாள ஆவணங்களில் முக்கியமானதாகவும், தனிமனிதனின் அடையாளமாகவும் கருதப்படுவது ஆதார். இதனை தொலைந்துவிட்டால் நாம் அதனை பெறும் வழிமுறைகள் குறித்து இன்று காணலாம்.
நாம் Uidai.Gov.in என்ற இணையத்தில் உள்நுழைய வேண்டும். பின் காப்பகத்தில் உள்ள ஆதார் சேவைகள் அமைப்பில், Lost UID என்று எழுதப்பட்டிருக்கும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அந்த பக்கத்தில் நமது பெயர், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் அல்லது மின்னஞ்சல் விபரத்தை கொடுத்து, OTP-க்கு Request கொடுத்து அதனை பதிவிடும்.
ஆறு இலக்க OTP பேற்பட்டதும், அதனை பதிவிட்டு உள்நுழைந்து நமது ஆதார் விபரத்தை பெற்றுக்கொள்ளலாம். அதனை பயன்படுத்தி இ-ஆதார் பெற்று புதிய ஆதார் வாங்கும் முயற்சியிலும் ஈடுபடலாம்.