வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது..! ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாது.! மத்திய அரசு.



house-owners-should-not-collect-house-rent-during-coron

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி 33 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பிடியில் உலக நாடுகள் அனைத்தும் சிக்கி தவித்துவருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் நடந்துவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலையே முடங்கிப்போய் உள்ளனர்.

corono

மேலும், பலர் தங்கள் வேலைகளை இழந்துள்னனர். இதனை சமாளிக்க, மத்திய அரசும், அணைத்து மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்துவருகிறது. அதன்படி,  ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது என்றும், வாடகை கொடுக்காத பட்சத்தில் வீடுகளை காலி செய்ய வற்புறுத்தக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.