அடேங்கப்பா! ஜனவரி 1 அணைக்கு மட்டும் இந்தியாவில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளது தெரியுமா?
அடேங்கப்பா! ஜனவரி 1 அணைக்கு மட்டும் இந்தியாவில் எத்தனை ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளது தெரியுமா?

பல கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் 2020 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுடன் மூன்று நாட்கள் முடிகிறது. இந்நிலையில் புத்தாண்டு அன்று எந்த நாட்டில் முதல் குழந்தை பிறந்தது, என்ன குழந்தை பிறந்தது என்பது குறித்த செய்திகள் சமூக வலைதளகங்ளில் வெளியாகி வைரலாக பேசப்பட்டது.
இந்நிலையில் இந்தியாவில் மட்டும் புத்தாண்டு அன்று எத்தனை குழந்தைகள் பிறந்தது என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது யுனிசெப் அமைப்பு. அதன்படி, உலகில் அதிக மக்கள் தொகைக்கொண்ட முதல் இடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா இந்த வருடம் முந்தியுள்ளது.
வழக்கமாக சீனாவில்தான் புத்தாண்டு அன்று அதிக குழந்தைகள் பிறப்பது வழக்கம். ஆனால், அதிக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா இந்த வருடம் முதல் இடம் பிடித்துள்ளது. புத்தாண்டு அன்று மட்டும் இந்தியாவில் சுமார் 67,385 குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.