கொரோனா சமயத்தில் மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் முக்கிய இடங்கள்!

கொரோனா சமயத்தில் மும்பையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் முக்கிய இடங்கள்!


heavy-rain-in-mumbai

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழை நீடித்து வருவதால் மும்பையின் முக்கிய இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மும்பை உள்ளிட்ட ஒரு சில அண்டை மாவட்டங்களில் இன்றும், நாளையும்  மிக அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை தவிர, மகாராஷ்டிராவின் தானே, புனே, ராய்காட் மற்றும் ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவசர சேவைகளில் செயல்படும் அரசு அலுவலங்களை தவிர மற்ற அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடற்கரை அல்லது தாழ்வான பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, நாளை மற்றும் வியாழக்கிழமை வரை வடக்கு மராட்டியத்தின் கடற்கரையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.