தீபாவளிக்கு மட்டும் நடை திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா? ஒரு சிறப்பு பார்வை.!

தீபாவளிக்கு மட்டும் நடை திறக்கப்படும் அதிசய அம்மன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா? ஒரு சிறப்பு பார்வை.!



hasanahampa-amman-kovil-karnadaka

தீபாவளி பண்டிகையை மட்டும் முன்னிட்டு நடை திறக்கப்படும் அதிசய அம்மன் கோவிலாக கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹாசனாம்பா கோவில் விளங்குவது ஒரு சிறப்பு அம்சமாகும்.

12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ணப்ப நாயக்கர் பாளையக்காரர்களால் கட்டுப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஹாசனாம்பா அம்மன் கோவில்.

tamilspark

இந்த கோயிலில் அப்படி என்னதான் ஒரு சிறப்பு என்றால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாத கடைசி முதல் ஐப்பசி மாத முதல் வாரத்திற்குள் வரும் பவுர்ணமியை அடுத்து வரும் வியாழன் அன்று கோவில் நடை திறக்கப்படும்.

 பிறகு அமாவாசையை அடுத்த 3 ஆவது நாள் கோவில் நடை மூடப்படுவது தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் வழக்கமாக இருந்து வருகிறது.

அதாவது 10 நாட்கள் முழுவதும் நடை சாத்தப்படாமல் இரவு நேரங்களில் திறந்தே இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடைபெற்று வருவது சிறப்பம்சமாகும்.

tamilspark 

இந்த கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட்டால் தீய சக்திகள் விலகி கேட்ட வரம் கிடைக்கும் என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை இருப்பதால் கர்நாடக மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என தென்னிந்தியாவில் இருந்து அதிகமான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.