இந்தியா

2 மின்விசிறிக்கும், பல்புக்கும் ரூ.2.5 இலட்சம் கரெண்ட் பில்... மின்கட்டணத்தால் பதறிப்போன தொழிலாளி.!

Summary:

2 மின்விசிறிக்கும், பல்புக்கும் ரூ.2.5 இலட்சம் கரெண்ட் பில்... மின்கட்டணத்தால் பதறிப்போன தொழிலாளி.!

மில் தொழிலாளி ஒருவரது வீட்டில் இரண்டு மின்விசிறிகள் மற்றும் பல்புகள் மட்டுமே உள்ள நிலையில், இரண்டரை லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பத்தேபாத் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் பெயிண்டர் வேலை செய்து வரும் நிலையில், தினக்கூலியாக 300 ரூபாய் பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து இவருக்கு எப்போதும் மின்கட்டணம் குறைவான அளவே வந்ததை அடுத்து, திடீரென 6 மாதத்திற்கான மின் கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று பில் வந்துள்ளது. 

இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் உடனடியாக மின்சார வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் இவரது புகாரை யாரும் கண்டுகொள்ளாததால், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகாரை அனுப்பி முறையிட்டுள்ளார்.

அத்துடன் தொழிலாளி ஒருவரது வீட்டிற்கு இரண்டு பல்புகள் மற்றும் இரண்டு மின்விசிறிகள் இருக்கும் நிலையில், இரண்டரை லட்சம் ரூபாய் பில் வந்தது எப்படி? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement