இந்தியா

அதனால்தான் நான் மிரட்டினேன்! தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி! பரபரப்பு விளக்கமளித்த ஹரி நாடார்!

Summary:

Hari nadar explain about blackmailing vijayalakshmi

தமிழ்சினிமாவில் பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி அதனைத் தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் கன்னட மொழியிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 நடிகை விஜயலட்சுமி கடந்த சில மாதங்களாகவே சீமான் குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாகவும் கூறிவந்தார். இந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடிகை விஜயலட்சுமிக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். மேலும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரும் விஜயலட்சுமிக்கு எதிராக வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று நடிகை விஜயலட்சுமி அவரது வீட்டில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்கொலைக்கு  முன் நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோவில், தனக்கு எதிராக சீமான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். மேலும் எனது தற்கொலைக்கு காரணம் சீமான் மற்றும் ஹரி நாடார்தான் என்பதுபோல பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுத்தது குறித்து ஹரி நாடார் கூறியதாவது, சீமான் குறித்து விஜயலட்சுமி பல அவதூறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சமீபத்தில் சீமானின் தாயாரைப் பற்றி மிகவும் அவதூறாக பேசி விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதை பார்த்த பின்பு தான் நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் நான் அவருக்கு போன் செய்தேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை பின்புதான் ஆவேசமாகப் பேசி வீடியோ வெளியிட்டேன் என கூறியுள்ளார். மேலும் எனது சமூகத்தைச் சேர்ந்த பெண்மணியைப் பற்றி பேச விஜயலட்சுமி யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்

 


Advertisement