அடுத்தவர் மனைவியை கர்ப்பமாக்கிய ஜிம் மாஸ்டர்! சுதாரித்துக்கொண்ட பெண்!

பெங்களூரில் வேறொருவரின் மனைவியை கர்ப்பாக்கிவிட்டு ஏமாற்றிய உடற்பயிற்சியாளரை அவரது திருமண நாளில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு தொட்டபள்ளாப்பூர் பகுதியை சேர்ந்த கவுதம் என்பவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். அந்த ஜிம்மில் கவுதம் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு சுவி என்ற பெண் இவரது உடற்பயிற்சி மையத்தில் இணைந்துள்ளார்.
சுவிக்கு டிப்ஸ் கொடுப்பது போன்று அவரது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்துள்ளார் கவுதம். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
இந்நிலையில் சுவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கணவரை பிரிந்து தந்தையுடன் வசித்து வருவதாக கவுதமிடம், தெரிவித்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கவுதம், சுவைக்கு ஆறுதல் கூறுவது போன்று நெருங்கி பழகியுள்ளார். இதன்பிறகு, திருமண ஆசை காட்டி சுவையை கர்ப்பமாக்கியுள்ளார். ஆனால் கவுதமிற்கு வேறு ஒரு பெண்ணுடன் நேற்று முன்தினம் திருமணம் நடைபெறவிருந்தது. இதனை தெரிந்துகொண்ட சுவி நடந்தவை அனைத்தையும் காவல்துறையில் புகார் அளித்து, தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்திற்குள் நுழைந்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து போலீசார் கவுதமை கைது செய்துள்ளனர்.