இந்தியா

காவலரின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய சிறுவன்..!! பின்னர் நடந்த விபரீதம்..!!

Summary:

காவலரின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய சிறுவன்..!! பின்னர் நடந்த விபரீதம்..!!

துப்பாக்கியை வைத்து விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன், துப்பாக்கியில் உள்ள டிரிக்கரை எதிர்பாராத விதமாக அழுத்தியதால் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவா மாநிலமான, கோவா வடக்கு மாவட்டத்தில் உள்ள பிகோலிம் நகராட்சியில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் தசரத் வைகங்கர். இவர் வழக்கம் போல்
பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவரது அறையில் துப்பாக்கியை வைத்து விட்டு குளியலறைக்கு சென்றுள்ளார். 

அப்போது அவரது 4 வயது மகன் துப்பாக்கியை எடுத்து அதில் உள்ள ட்ரிக்கரை அழுத்தியுள்ளார். பின்னர் அந்த துப்பாக்கியில் உள்ள குண்டு அந்தச் சிறுவனின் உடம்பில் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இச் சம்பவம் குறித்து பிகோலிம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அச்சிறுவனின் மரணம் இயல்பாகவே நடந்துள்ளது என வழக்கை முடித்து வைத்தனர்.


Advertisement