புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
4 முதல் 8 வயது குழந்தைகள் டார்கெட்.!! மொபைல் முழுக்க ஆபாச படங்கள்.!! போக்சோவில் கைதான பெயிண்டர்.!!
குஜராத் மாநிலத்தில் 4 சிறுமிகளை கற்பழித்த பெயிண்டர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரின் செல்போனை சோதனை செய்ததில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குற்றவாளியை கைது செய்த போலீஸ்
குஜராத் மாநிலத்தில் 4 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் சந்திரகாந்த் பட்டேல் என்ற 54 வயதான நபரை கைது செய்தனர். பெயிண்டர் வேலை செய்யும் இவர் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
4 முதல் 8 வயது குழந்தைகள் டார்கெட்
இது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலமளித்த சந்திரகாந்த் பட்டேல், 4 முதல் 8 வயது உடைய குழந்தைகளை டார்கெட் செய்து பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: வெங்காய வெடிகள் வெடித்து இளைஞர் பீஸ்., பீஸாக சிதறி மரணம்; தீபாவளியன்று பயங்கரம்.!
செல்போனில் சிக்கிய வீடியோக்கள்
மேலும் அவரது செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளை கற்பழிக்கும் போது அவற்றை வீடியோவாக பதிவு செய்து வைத்திருக்கிறான் சந்திராகாந்த் பட்டேல். குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "எனக்கு அவங்க தான் முக்கியம்.." தோழிகளுக்காக மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.!!