திக் திக் நிமிடம்... சிங்கத்துடன் போராடி உயிரை பணையம் வைத்து மறுஜென்மம் எடுத்த கிராமவாசி! திகில் காட்சி....!!!



gujarat-lioness-attacks-villager-bhavnagar

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கராசியா கிராமத்தில் ஆசியச் சிங்கம் ஒன்று கிராமவாசி ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அச்சத்தில் ஓடியபோது நிகழ்ந்த தாக்குதல்

வனத்துறையின் தகவலின்படி, பெண் சிங்கம் தனது வழக்கமான நடமாட்டப் பாதையில் கராசியா கிராமப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. அதிகாலை நேரத்தில் அதை கண்ட கிராம மக்கள் கூச்சலிட்டதால் மிரண்ட சிங்கம் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காலுபாய் கமாரா என்பவரின் மீது பாய்ந்து தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகளின் செல்போன் 3 நாட்களாக சுவிட்ச் ஆப்.... என் பொண்ணு எங்கே? கேள்வி கேட்ட தாயின் மூக்கை அறுத்து எரிந்த கொடூரம். பதற வைக்கும் பின்னணி..!!

சிகிச்சையில் கிராமவாசி; தேடுதலில் வனத்துறை

தாக்குதலில் காயமடைந்த காலுபாய் கமாரா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அந்த பெண் சிங்கத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், வனவிலங்குகளை யாரும் துன்புறுத்தவோ, தாங்களாகவே விரட்ட முயற்சிக்கவோ கூடாது என்றும், அவை தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆசியச் சிங்கங்களின் ஒரே இயற்கை வாழிடமாக விளங்கும் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில், கடந்த சில மாதங்களாக மனிதர்களுக்கும் சிங்கங்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்திய தாக்குதலையும் சேர்த்து கடந்த சில மாதங்களில் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2025-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் தற்போது 891 ஆசியச் சிங்கங்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இது என்னடி டிரஸ்ஸு? கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம்! கையும் களவுமாகப் பிடித்த கணவன்.... .அடுத்தடுத்து நடந்த பயங்கரம்...!!!