இந்தியா

1 வயது குழந்தை தந்தையால் பாலியல் பலாத்காரம்.. உடந்தையாக தாய்..! கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம்.!!

Summary:

1 வயது குழந்தை தந்தையால் பாலியல் பலாத்காரம்.. உடந்தையாக தாய்..! கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம்.!!

பிறந்து 16 மாதமேயாகும் பச்சிளம் குழந்தையை தந்தை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரத்திற்க்கு குழந்தையின் தாயும் உடந்தையாக இருந்த கொடூரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நகரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நோக்கி சென்ற இரயிலில் கணவன் - மனைவி கைகுழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். இந்த குழந்தை நீண்ட நேரம் ஆகியும் அசைவு இல்லாமல் இருந்த காரணத்தால் சந்தேகமடைந்த பயணிகள், பயனம்சசீட்டு பரிசோதகர் மற்றும் இரயில்வே காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

இரயில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் இரயில் நிலையத்தை சென்றடைந்ததும், குழந்தையுடன் தம்பதியை இறக்கிய அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்ய குழந்தையை வாங்கியுள்ளனர். குழந்தையை மருத்துவ பரிசோதனை செய்ததில், குழந்தை இறந்து நீண்ட நேரம் ஆகியது உறுதியானது. 

இதனையடுத்து, இருவரையும் இரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். மேலும், மருத்துவ பரிசோதனையில், பிறந்து 16 மாதமே ஆகும் பச்சிளம் பெண் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் தந்தை தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராது பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இந்த விஷயத்திற்கு தாயாரும் உடந்தையாக இருந்துள்ளார். குழந்தையின் உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று, சொந்த ஊரில் அடக்கம் செய்ய எடுத்துச்சென்ற போது தம்பதிகள் இருவரும் கைதாகியுள்ளனர். 

இவர்களின் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தம்பதிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


Advertisement