கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து; தந்தை - மகள் பரிதாப பலி., தாய், பச்சிளம் குழந்தை உயிர் ஊசல்.!Gujarat Anand District bike Car Collided Face to Face Daughter Father Died 

 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டம், போர்சாட் ஜரோல் கிராமத்தில் வசித்து வருபவர் கிராண்பாய் ஜாதவ். இவரின் மனைவி நிஷா. தம்பதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. 

இவருக்கும் ஜியா என்ற 5 வயதுடைய மகளும், தேவன்ஷி என்ற 3 வயதுடைய மகளும் பிள்ளைகளாக இருக்கின்றனர். சம்பவத்தன்று தம்பதிகள் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் தாவோல் பகுதியில் சென்றுகொண்டு இருந்தனர். 

அப்போது, சூரத் நகரில் இருந்து காரில் பயணித்த ஓட்டுனர், சாலையோரம் எதிர்திசையில் பயணித்து முந்திச்செல்ல முற்பட்டுள்ளார். அச்சமயம் தம்பதிகளின் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதும், கால்பந்து போல குடும்பத்தினர் தூக்கி வீசப்பட்டன. கார் சாலையோரம் சென்று நின்றது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே தந்தை மற்றும் மூத்த மகள் பரிதாபமாக பலியாகினர். 

தாய் மற்றும் இரண்டாவது மகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.