இந்தியா

அடேங்கப்பா.. இப்படியொரு வரதட்சணையை யாருமே கேட்ருக்க மாட்டாங்க! மாமியாருக்கு ஷாக் கொடுத்த மணமகன்!!

Summary:

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வரும் நிலையில் மத்திய,

நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமணம் போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் மிகவும் எளிமையாக குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்திரபிரதேச சாஜன்பூர்  பகுதியில் வெறும் 17நிமிடங்களில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 

அதாவது மணமக்களான புஷ்பேந்திர துபே மற்றும் ப்ரீத்தி திவாரி இருவரும் பாட்னா தேவி கோவிலில் எந்த ஒரு அலப்பறையும் இல்லாமல், தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் கோவிலை 7 முறை சுற்றி வந்து 17 நிமிடங்களில் திருமணத்தை முடித்துள்ளனர். அதுமட்டுமின்றி மணமகன் மணமகளின் தாயாரிடம் ஒரே ஒரு ராமாயண புத்தகத்தை மட்டும் தங்களுக்கு வரதட்சணையாக கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். மேலும் பலரும் இந்த திருமண தம்பதியினரை பாராட்டி வருகின்றனர்.


Advertisement