பெரும் பதற்றம்.. காணாமல் போன கோயில் பூசாரி.. கண்கள் நோண்டி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.!

பீகாரில் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் மனோஜ் குமார். இவர் அங்குள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மனோஜ் குமார் கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு காணாமல் போய் உள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தப்பட்டு காணாமல் போன மனோஜ் குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று முட்புதர் ஒன்றில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் மனோஜ் குமார் என்பதை உறுதி செய்தனர்.
மேலும் மனோஜ் குமார் கண்கள் பிடுங்கி நிலையில், பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.