அப்துல் கலாமின் ஆசை நிறைவேறியது.! அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்... விண்ணில் பறக்கவிருக்கும் பள்ளி மாணவிகள் வடிவமைத்த ராக்கெட்.!

அப்துல் கலாமின் ஆசை நிறைவேறியது.! அரசு பள்ளி மாணவிகள் அசத்தல்... விண்ணில் பறக்கவிருக்கும் பள்ளி மாணவிகள் வடிவமைத்த ராக்கெட்.!


govt school girl built rocket

இந்தியாவின்  75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவிகள் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக்கோள் வரும் 7ம் தேதி காலை விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் சிறிய விண்ஏவுதல் வாகனமான,  எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த செயற்கைகோளை தயாரிக்க இஸ்ரோ இந்தியா முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக தேர்வு செய்தது. இதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகளில் 750 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர் . இந்த திட்டத்தில் தமிழகத்திலிருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நாட்டின் அரசு பள்ளி மாணவிகள் தயாரித்த இந்த மென்பொருள் வான்வெளி உயரம், தட்பவெட்பம், ஈரப்பதம் ஆகியவற்றில் எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான ஆய்வில் மாணவிகள் ஈடுபட்டு வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர்.