அரசு மருத்துவர்கள் இனி தனியாக கிளினிக் நடத்த கூடாது! முதல்வரின் அதிரடி உத்தரவிற்கு குவிந்துவரும் பாராட்டுகள்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் இந்தியா மருத்துவம்

அரசு மருத்துவர்கள் இனி தனியாக கிளினிக் நடத்த கூடாது! முதல்வரின் அதிரடி உத்தரவிற்கு குவிந்துவரும் பாராட்டுகள்!


ஆந்திர அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் யாரும் இனி தனியார் கிளினிக்குகள் நடத்தக் கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

பொதுவாகவே அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், நோயாளிகளிடம் நடந்துகொள்ளும் விதமும், அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் விதமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். ஒருசில அரசு மருத்துவர்கள் நோயாளிகளை பிச்சைக்காரனை துரத்துவது போல ஏழை மக்களை நடத்துவார்கள். ஒரு சிலர் நோயாளியை அருகில் கூட நெருங்க விட மாட்டார்கள்.

 ஆனால் அதே மருத்துவர் அவரது தனியார் க்ளீனிக்கில் ரூ.150 தரும் நோயாளியிடம், சளி இருக்கா? இருமல் இருக்கா? என்று இனிக்க இனிக்க பேசுவார். ஒருசில அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு சில மருத்துவர்கள் மணி அடித்தால் வேலையை முடித்து பறந்து விடுவார்கள். ஆனால் மருத்துவமனைக்கு வரும்போது மருத்துவர்கள், சரியான நேரத்திற்கு வருவதில்லை. 

ஏனென்றால் அவர்களுக்கு தங்களது க்ளீனிக் வேலை தான் முக்கியம். இந்தநிலையில் ஜெகன் மோகன் ரெட்டி, அரசு மருத்துவர்கள் யாரும் தனியாக கிளினிக் நடத்த கூடாது என தெரிவித்தார். அவர் அறிவித்த உத்தரவு அரசு மருத்துவமனையில் அல்லல்படும் ஏழை மக்களின் துயர் போக்கும் மிகச்சிறந்த சட்டம் என ஜெகன் மோகன் ரெட்டி அவர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர். இதே சட்டம் தமிழகத்திற்கும் வந்தால் சிறப்பாக இருக்கும் என தமிழக மக்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo