
கேரள மக்களுக்காக கூகுள் நிறுவனம் அறிவித்த நிவாரணநிதி எவ்வளவு தெரியுமா ?
கேரளாவில் தொடர் கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாககூகுள் நிறுவனம் 7 கோடி ரூபாய் அளிக்க உள்ளது.
கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது.
மேலும் மழைவெள்ளத்தாலும்,நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டு 400 பேர் பலியானர். மேலும் 8.69 லட்சம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி பெரும் சிரமம் அடைந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என தாமே முன்வந்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து உதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் தேடுதல் வலைத்தளமான கூகுள் நிறுவனம் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 7 கோடி நிவாரண நிதி உதவி அளிக்கவுள்ளது.
இது குறித்து இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன் பேசுகையில், கேரளா வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிக்காக 7 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் கூகுள் கிரிஸிஸ் ரெஸ்பான்ஸ் குழு சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஆப்பிள் நிறுவனமும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 7 . கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது.
Advertisement
Advertisement