பதுங்கும் முதலீட்டாளர்கள்.. இந்த வாரம் தங்கம் விலை எப்படி இருக்கும்.?!



GOLD PRICE MAY DECREASE UPCOMING DAYS

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திங்கள்கிழமை குறிப்பிடத்தக்க அளவில் சரிவை சந்தித்தன. அமெரிக்கா, ஈரான் இடையேயான போர் பதற்றம் மீண்டும் அதிகரித்ததையடுத்து சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்திய நாட்டின் சராஃபா சங்கத்தின் தகவலின்படி, 99.9 சதவீத தரம் கொண்ட தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.2,500 குறைந்து ரூ.1,60,400 ஆக பதிவானது. முந்தைய நாளில் இது ரூ.1,62,900 ஆக இருந்தது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,69,700 ஆக குறைந்துள்ளது. கடந்த வர்த்தக நாளில் இது ரூ.2,74,700 ஆக இருந்தது.

அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், அமெரிக்க டாலரும் வலுவடைந்துள்ளது. இதன் விளைவாக தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்புமிக்க உலோகங்களின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இதுதான் சரியான நேரம்.....ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,120 குறைந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

மேலும், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருமான விகிதம் உயர்ந்திருப்பதும் தங்க விலையை வீழ்த்த காரணமாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பான முதலீட்டு கருவிகளுக்கான முதலீட்டாளர்களின் கவனம் அதிகரித்துள்ளது. 

இந்த வாரத்தில் அமெரிக்க வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள், பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் கருத்துகள் மற்றும் மேற்கு ஆசியாவில் உருவாகும் புதிய அரசியல் முன்னேற்றங்கள் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.`

இதையும் படிங்க: BREAKING: மக்களுக்கு மகிழ்ச்சி அளித்த தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு அதிரடி சரிவு!!!