ஆன்லைனில் ஆசை ஆசையாக ஆர்டர் செய்யப்பட்ட நெயில் பாலிஷ்! இறுதியில் இளம் பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
ஆன்லைனில் ஆசை ஆசையாக ஆர்டர் செய்யப்பட்ட நெயில் பாலிஷ்! இறுதியில் இளம் பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியராக இளம்பெண் ஒருவர் கடந்த சில காலங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் நெயில் பாலிஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.மேலும் அதற்காக ரூபாய் 388 ஐ ஆன்லைன் மூலம் பரிமாற்றமும் செய்துள்ளார். ஆனால் நெயில் பாலிஷ் டெலிவரி ஆகவேண்டிய தினத்தில் வரவில்லை. இந்நிலையில் அந்த இளம்பெண் இதுகுறித்து இணையத்திற்கு சொந்தமான வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளார்.
அப்போது பேசிய சேவை மையத்தினர் அதற்கான பணம் இன்னும் வரவில்லை, அதனால் தான் நெயில் பாலிஷ் டெலிவரி செய்யவில்லை. பணம் வந்தால் மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவோம் என கூறி செல்போன் எண்ணை வாங்கி உள்ளனர்.
இந்நிலையில் மொபைல் எண்ணை கொடுத்த சில மணி நேரங்களில் அந்த இளம்பெண்ணின் இரண்டு வெவ்வேறு தனியார் வங்கி கணக்கிலிருந்து 90946 ரூபாய் பணம் 5தவணையாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வங்கி கணக்கிலிருந்து ரூ1500 எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்தை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட அவர் இறுதியாக அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார்கள் சந்தேகத்திற்குரிய இரு நபர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.