இந்தியா

பூனைக்கு பூஜை..! நாற்காலியில் உட்காரவைத்து பொட்டு வைத்த பெண்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

Summary:

Girl done poojaa for cat video goes viral

பொதுவாக நாய், பூனை, கிளி போன்றவற்றை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது வழக்கமான ஓன்று. ஆண்களை விட, பெண்களே பல நேரங்களில் செல்லப்பிராணிகள் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படுகின்றார். சிலருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் அதே நேரத்தில் பாசமும் அதிகமாகிவிடுகிறது.

சிலர் செல்ல பிராணிகளை தங்களின் குழந்தைகளை போல் வளர்ப்பதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், இந்த வீடியோவில் இருக்கும் பெண் ஒருவர், தங்கள் வீட்டில் வளர்க்கும் பூனை ஒன்றுக்கு ஃப்ராக் ( frock ) போட்டு விட்டு பூஜை செய்த செயல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

ஒரு நாற்காலியில் பூனையை உட்கார வைத்து, அதற்கு பொட்டு வைத்து , ஆரத்தி எடுத்து , ஃப்ராக் ( frock ) போட்டு அந்த பூனைக்கு பூஜை செய்கிறார் அந்த பெண். அந்த பூனையும் இவர்கள் ஏதோ செய்கிறார்கள் என திரு திருவென பார்க்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement