நடு ரோட்டில் நின்று கதறி அழுத சிறுவன்..! சிறுநீர் கழிக்க சென்ற தாய் செய்த மோசமான காரியம்..! கண்ணிமைக்கும் நொடியில் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!



girl-commit-suicide-in-falling-river

கர்நாடகம் சாம்ராஜ்நகர் அன்னூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கெம்பண்ணா. இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கெம்பண்ணா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் பூர்ணிமா கணவனிடம் கோபித்துக்கொண்டு அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று விடுவார்.

இவ்வாறு சமீபத்திலும் பூர்ணிமா கணவரிடம் சண்டை போட்டுக்கொண்டு, அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று மாமியார்  வீட்டிற்கு விரைந்த கெம்பண்ணா பூர்ணிமாவை சமாதானப்படுத்தி தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து பூர்ணிமாவும் அவருடன் வந்துள்ளார். இந்நிலையில் கெம்பண்ணா தனது மனைவி மற்றும் குழந்தையை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு தேமஹள்ளி கிராமத்திற்கு சென்றுள்ளார்.

dead

அப்பொழுது செல்லும் வழியில் பூர்ணிமா திடீரென்று தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கெம்பண்ணாவும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று வருமாறு கூறியுள்ளார். அப்பொழுது பூர்ணிமா சற்றும் எதிர்பாராத விதமாக ஓடும் கபினிஆற்றிற்கு சென்று குதித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த கெம்பண்ணா மனைவியை காப்பாற்ற எண்ணி தானும் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் ஆற்றில் மூழ்கி பலியானர். மேலும் அவர்களுடைய குழந்தை மட்டும் அனாதையாக மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு அலறிதுடித்துள்ளது.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தநிலையில்,அவர்கள் அங்கு விரைந்து பூர்ணிமா மற்றும் கெம்பண்ணாவின் சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் தாய் தந்தையை இழந்து தவித்த அந்த குழந்தையை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது