இந்தியா

திருமணம் முடிந்த சில மாதத்தில் அழகான மனைவிக்கு கணவனால் நேர்ந்த கொடுமை! கதறி துடித்த பெற்றோர்!

Summary:

Girl commit suicide after 4 moths of marriage

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஹிதேஷ் (27). இவருக்கும் பாவனா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து பல்வேறு கனவுகளுடன் தனது கணவர் வீட்டிற்கு சென்ற பாவனாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்று பாவனாவின் கணவரும், அவரது பெற்றோரும் பவனாவிடம் 6 லட்சம் வரதட்சணை வாங்கிவருமாறு கூறியுள்ளனர், இதுபோன்று மாப்பிளை வீட்டார் பலமுறை பாவனாவை கொடுமை படுத்தியதால் மனமுடைந்த பாவனா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருணம் முடிந்து 4 மாதத்தில் தங்களது மகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி துடித்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் தற்கொலை என வழக்கு பதிவு செய்து ஹித்தேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த பாவனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதை அடுத்து ஹித்தேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement