இந்தியா

நீங்களும் உதவலாமே! பிரதமர் நிவாரண நிதிக்காக கவுதம் கம்பிர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Summary:

Gautham kampir announced releif fund

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் இதுவரையில் 2902 பேர்  கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 68பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கவும்,  சமூகவிலகலை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு அதிகளவில் பணம் தேவைப்படும் நிலையில், பிரதமர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும், பல தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பிர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏற்கெனவே ரூ.1 கோடி அறிவித்திருந்தார்.  அதனை தொடர்ந்து கவுதம் கம்பிர் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மக்கள் தங்களுடைய தேசம் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான கேள்வி. உங்களுடைய நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? நான் என்னுடைய இரு வருடத்திற்கான எம்.பி. சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கபோகிறேன். நீங்களும் உதவ முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement