Viral Smile Boy Arun: லாரி கிளீனராக இருந்து வைரல் ஹீரோ ஆன சிறுவன்.. யார் இந்த அருண்?
சமூக வலைத்தளங்களில் சிரிப்பால் சாதனை படைத்த சிறுவன் தனது வாழ்க்கையில் சாதித்த சுவாரஸ்ய தகவலை இன்று தெரிந்துகொள்ளலாம்.
வைரல் சிரிப்புக்கு சொந்தக்காரர்:
சமூக ஊடகங்களில் மீம், ட்ரோல் அல்லது நகைச்சுவை வீடியோவை எடுத்தாலும், அந்த அப்பாவி சிறுவனின் சிரிப்பு இடம்பெறாமல் இருப்பதில்லை. தற்செயலான சிரிப்பு வீடியோ சிறுவனின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. அந்த வைரல் வீடியோவில் தோன்றும் சிறுவனின் பெயர் அருண். இவர் தெலுங்கானா மாநிலம், போப்பல்பள்ளி மாவட்டத்தில் உள்ள நலப்புச்சத்வில்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியில் பிறந்த அருண், 4ம் வகுப்புக்குப்பின் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார்.
இதையும் படிங்க: பெண்களே! நடுராத்திரிலும் பயமில்லாமல் தனியா நடந்து போக ரொம்ப பாதுகாப்பான நாடு இதுதான்! இந்திய பெண் வெளியிட்ட வீடியோ வைரல்!
வாழ்க்கையை புரட்டிய அந்த சிரிப்பு:
நாம் பார்க்கும் வீடியோ திட்டமிட்டு எடுக்கவில்லை என்றாலும், ஓட்டுனருடன் சம்பவத்தன்று பேசிக்கொண்டு டீ - குடித்தபோது, அவர் செய்த நகைச்சுவைக்கு அப்பாவித்தனத்துடன் அருண் சிரித்தது பலரையும் கவர்ந்தது. அந்த நொடியில் இருந்து இன்று வரை கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த வைரல் காட்சியாக அது மாறியது. வீடியோவை ஓட்டுநர் பதிவேற்றிய ஒரு மாதத்துக்குள் 4 கோடி பார்வையாளர்களை கடந்து வைரலாகி, தற்போது பட்டிதொட்டியெங்கும் கவனிக்கப்பட்டுள்ளது.

சமூக பிரபலம்:
வறுமை காரணமாக 4ஆம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திய அருண், ஓட்டுநர் நேருவின் உதவி மற்றும் ஊக்கத்தால் மீண்டும் கல்விக்குத் திரும்பினார். தற்போது சிறுவன் அருண் 10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார். தெலுங்கானாவில் ஒரு சமூக ஊடக பிரபலமாக மாறியுள்ளார். பல முன்னணி யூடியூப் சேனல்கள் அருணை நேர்காணல் செய்துள்ளன. மேலும், தன்னைப்போன்று கஷ்டத்தில் இருக்கும் சிறுவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக இயன்றதை செய்வேன் என சிறுவன் அருண் பேட்டி அளித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: 19 நிமிட அந்தரங்க வீடியோ.. நீங்கள் ஷேர் செய்தீர்களா?.. எச்சரிக்கும் நிபுணர்கள்.!