செல்போன் பண பரிமாற்றங்களுக்கான; SMS கட்டணங்களை தள்ளுபடி செய்தது SBI வங்கி..!

செல்போன் பண பரிமாற்றங்களுக்கான; SMS கட்டணங்களை தள்ளுபடி செய்தது SBI வங்கி..!


For cell phone money transfers; SBI Bank has waived SMS charges..!

டெல்லி, பாரத ஸ்டேட் பேங்க் (SBI) செல்போன் மூலமாக செய்யும் பணப் பரிமாற்றங்களுக்கான குறுஞ்செய்தி (SMS) கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. விளிம்பு நிலை மற்றும் ஏழை மக்களிடையே செல்போன் மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ளது.

USSD சேவைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என பாரத ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது. இது குறித்து பாரத ஸ்டேட் பேங்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்கள் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் தற்போது எந்த கட்டணமும் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்யலாம். பணம் அனுப்புதல், கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் மற்றும் UPI பின்னை மாற்றுதல் போன்ற எந்த கூடுதல் செலவும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் சேவை பெற முடியும் என  பாரத ஸ்டேட் பேங்க் அறிவித்துள்ளது.