சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ஃப்ரிட்ஜில் கோழிக்கறியை வைத்து சூடுபடுத்தி சாப்பிட்டதால் மரணம்! என்ன தவறு? எதைக் கவனிக்க வேண்டும்? மருத்துவர் விளக்கம்...
ஹைதராபாத் பகுதியில் நடந்த போனலு திருவிழா கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட கோழி மற்றும் ஆட்டுக்குடல் உணவை மறுநாள் சாப்பிட்டதால், ஒரே குடும்பத்தினர் உணவுப் புழுக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
49 வயதான குடும்பத் தலைவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனையின் டாக்டர் பரூக் அப்துல்லா வழங்கிய உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள் கீழே:
உணவு பாதுகாப்பில் தவறான புரிதல்கள்
“ஃப்ரிட்ஜில் வைத்தால் உணவு கெடாது” என்பது தவறான நம்பிக்கையாகும். உணவு கெடாமல் இருக்க ஃப்ரிட்ஜில் 2°C – 8°C வெப்பநிலையை மட்டும் பயன்படுத்தலாம். ஆனால், அது உணவின் சிதைவை தற்காலிகமாக தள்ளிப்போடும்; நிரந்தரமாகத் தடுக்காது.
இதையும் படிங்க: ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ்கட்டிகள் மலைபோல் உறைந்துள்ளதா..? இனி உறைவதை தடுக்க 6 சூப்பர் டிப்ஸ் இதோ...
மாமிசத்தை எப்படி பாதுகாக்கலாம்?
3 நாட்களில் சாப்பிட திட்டமிடினால் 2°C – 4°C வெப்பநிலையில் பாதுகாப்பது சிறந்தது.
நீண்ட நாட்களுக்கு வைக்க விரும்பினால் ஃப்ரீசர் பாகத்தில் -18°C-இற்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும்.
மாமிசத்தை காற்று புகாத அடைப்புகளுடன் வைத்தால் கிருமிகள் பரவாமல் தடுக்கும்.
உணவை சமைப்பதற்கு முன், பேக் செய்வதற்கு முன், பரிமாறுவதற்கு முன் கைகளை சோப்பால் கழுவுவது கட்டாயம்.
உணவை சமைக்கும் முறையும் முக்கியம்
மாமிசம் 71°C (160°F) அளவுக்கு மேலாக வெந்து இருக்க வேண்டும்.
சமைத்த உணவை விருந்துக்கு 2-4 மணி நேரத்துக்குள் பரிமாறி முடிக்க வேண்டும்.
எப்போதும் உணவை சூடாக்கி பரிமாற வேண்டும். இது கிருமிகளை அழிக்க உதவும்.
ஃப்ரிட்ஜ் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
மின்சாரத் துண்டிப்பு அதிகம் ஏற்படும் இடங்களில் வெப்பமானி வைத்து ஃப்ரிட்ஜ் உள்ளே உள்ள வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும்.
4°C-ஐத் தாண்டும் போது உணவுகளை உடனே வெளியேற்ற வேண்டும்.
ஃப்ரீசரில் வைத்த மாமிசத்தை நேரடியாக அறை வெப்பநிலையில் வைக்காமல், முதலில் ஃப்ரிட்ஜில் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும்.
முக்கிய கவனிக்க வேண்டியவை
உணவுகளை ஃப்ரிட்ஜில் மட்டும் வைத்தால் போதாது, சரியான வெப்பநிலை, சூடு செய்தல், மற்றும் தொற்று தடுப்பு முறைகள் அவசியம்.
குளிர்சாதனப் பெட்டியில் உணவு இருக்கும்போதும், சிக்கலின்றி பாதுகாக்கும் நடவடிக்கைகள் மிக முக்கியம்.
மாமிச உணவுகளை தவறாக கையாள்வதால் மரணத்துக்கே வழிவகுக்கக்கூடும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. நாம் சாப்பிடும் உணவு, நம் உயிரின் பாதுகாப்பு என்பதை நினைவில் கொண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதே சிறந்தது.
இதையும் படிங்க: இந்த உணவுகளை எல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாது? மீறி சாப்பிட்டால் விஷமாக கூட மாறலாம்!