உத்தரகாண்டை தொடர்ந்து.. உத்திரபிரதேசத்தின் அலிகாரில்.. வீடுகளில் ஏற்பட்ட விரிசல்... அச்சத்தில் மக்கள்...!

உத்தரகாண்டை தொடர்ந்து.. உத்திரபிரதேசத்தின் அலிகாரில்.. வீடுகளில் ஏற்பட்ட விரிசல்... அச்சத்தில் மக்கள்...!


Following Uttarakhand.. Cracks in houses in Aligarh, Uttar Pradesh... People in fear..

இமயமலை அடிவாரத்தில் மெல்ல மெல்ல உதயம் ஜோஷிமத் நகரம். ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் முழுப் பகுதியும் மெல்ல மெல்ல மூழ்குவதைக் காட்டுகின்றன. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய நகரம் ஜோஷிமத். இந்த நகரம் பூலோக சொர்க்கம் என அழைக்கப்படுகிறது. இந்த நகரத்திற்க்கு பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது. ஜோஷிமத் நகரம், மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருகிறது.

இங்குள்ள 4,500 கட்டிடங்களில் 610 கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, அவை வாழத்தகுதியற்றவையாக மாறியதால், அந்த கட்டிடங்களில் இருப்பவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஜூலை 2020 முதல் மார்ச் 2022 வரை சேகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் முழுப் பகுதியும் மெதுவாக மூழ்குவதைக் காட்டுகின்றன. சிவப்பு புள்ளிகள் மூழ்கும் பகுதிகளைக் குறிக்கின்றன. அவை ஜோஷிமத் நகரத்தில் மட்டும் அல்லாமல் பள்ளத்தாக்கு முழுவதும் பரவியுள்ளதை, தரவு காட்டுகிறது. 

இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் நடத்திய இரண்டு வருட ஆய்வில், ஜோஷிமத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் ஆண்டுக்கு 6.5 செ.மீ அல்லது 2.5 இன்ச் என்ற விகிதத்தில் மூழ்கி வருவதாக தெரியவந்துள்ளது. டேராடூனை தளமாகக் கொண்ட நிறுவனம் இந்த பகுதியின் செயற்கைக்கோள் தரவைப் வெளியிட்டு உள்ளது. ஜோஷிமத்தில் இருக்கும் 110 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.
மேலும் முழு நகரத்தையும் காலி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரின் பல பகுதிகள் புதைந்து வருவதை தொடர்ந்து, பக்கத்து மாநிலமான உத்தர பிரதேசத்தின் அலிகாரில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. திடீரென பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.