பறக்கும் தோசை.. சுட்ட தோசையை நேரடியாக தட்டுக்கே பறக்கவிடும் தோசை மாஸ்டர்.. வைரல் வீடியோ..

சுட்ட தோசையை பறக்க விடும் நபர் ஒருவரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.


Flying dosa viral video

சுட்ட தோசையை பறக்க விடும் நபர் ஒருவரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி இணையத்தில் செம வைரலாகிவருகிறது. குறிப்பிட்ட வீடியோ பதிவில், ரோட்டோர கடை ஒன்றில் தோசை சுடும் நபர் ஒருவர், தான் சுட்ட தோசையை நேரடியாக வாடிக்கையாளரின் தட்டுக்கே பறக்கவிடுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதில் இருந்து தற்போது வரை 8 கோடியே 40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இப்படி செய்வது சரிதான் என்றாலும், நாம் சாப்பிடும் உணவுக்கு தகுந்த மரியாதை கொடுக்கவேண்டும் எனவும் நெட்டிசன்கள் அந்த வீடியோ பதிவிற்கு தங்கள் கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.