காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொரோனா போர் வீரர்களுக்கு விமானம் மூலம் மலர் தூவி மரியாதை!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொரோனா போர் வீரர்களுக்கு விமானம் மூலம் மலர் தூவி மரியாதை!



Flowers through from flight Kashmir to kanniyakumari

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முன்கள வீரர்களாக செயல்பட்டு வரும் சுகாதரப் பணியாளர்கள், போலீசார் ஆகியோருக்கு, இந்திய ராணுவம் சார்பில்  போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் இன்று அணிவகுப்பு மரியாதை செய்ய உள்ளதாக
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொரோனா முன்கள பணியாளர்களுக்கு இந்திய போர் விமானம் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோர் கொரோனா போர் வீரர்களாக அழைக்கப்படுகின்றனர். 

corona

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவமனைகள் மீது மலர்தூவி இந்திய ராணுவத்தினர் மரியாதை செய்தனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு நன்றி கூறும் விதமாக மரியாதை அளிக்கப்பட்டது. சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவை மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி விமானப்படை மரியாதை செலுத்தியுள்ளனர்.