BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு...!! வழக்கறிஞர்கள் இடையே நடந்த மோதலால் பரபரப்பு..!!
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தீஸ் ஹசரி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் குழுவிற்கு இடையே மோதல் எற்பட்டதால் தகராறில் ஓருவரை ஓருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலின் போது போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்குள்ள காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் எற்படவில்லை என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மோதல் நடந்த நீதிமன்ற வளாகத்தில் தற்போது காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.