சொத்தில் பங்கு கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகன்.. தந்தை எடுத்த அதிரடி முடிவு.!Father wrote a property to judge

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிபல்மண்டி நிரலாபாத் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் சங்கர் பாண்டே. இவருக்கு 2½ கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்த நிலையில் புகையிலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரின் மூத்த மகன் திக் விஜய் என்பவர் சொத்தில் ஒரு பகுதியை தனக்கு எழுதி தருமாறு தந்தையை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணேஷ் சங்கர் பாண்டே தனது சொத்துகள் முழுவதையும் ஆக்ரா நீதிபதி பெயருக்கு எழுதி வைத்துள்ளார். இது குறித்து கணேஷ் சங்கர் பாண்டேயிடம் கேட்ட போது எனது மகன் என்னை மதிப்பதில்லை, என் வார்த்தைகளை கேட்பதில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், ஆக்ரா மாவட்ட நீதிபதி பெயரில் சொத்துகளை எழுதி வைத்து விட்டேன். 

எனது மரணத்துக்கு பிறகு அரசு இதை பயன்படுத்தி கொள்ள முடியும் என்றார். தந்தை மகன் பிரச்சனயில் சொத்துகள் முழுவதையும் நீதிபதி பெயரில் எழுதி வைத்தது அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.