நாய்க்கு பயிற்சி கொடுத்து ஒரு தந்தை செய்யும் காரியத்தை பாருங்க!! வைரலாகும் வீடியோ..

தனது மகளின் அன்றாட செயல்களை கவனிக்க நாய் ஒன்றுக்கு பயிற்சி கொடுத்துள்ளார் சீனாவை சேர்ந்த தந்தை ஒருவர்.
மனிதர்களுடன் மிகவும் நெருங்கி பழக்கூடிய விலங்குகளில் ஒன்று நாய். பல இடங்களில் நாய்களை செல்ல பிராணிகளாகவும், காவலுக்காகவும் மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், தனது மகளை கண்காணிப்பதற்காக தனது நாய்க்கு பயிற்சி கொடுத்துள்ளார் சீன நாட்டை சேர்ந்த தந்தை ஒருவர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் குழந்தை சிறுவயதில் உணவருந்தும்போது, அவளது உணவை பூனை எடுத்துச் செல்லாமல் இருக்க எனது நாய்க்கு பயிற்சி கொடுத்தேன். எனது நாயும் அந்த பணியை மிக சிறப்பாக செய்தது. அவள் வளர்ந்த பிறகு, சரியாக வீடு பாடங்கள் செய்வதில்லை. இதனை கண்காணிக்க எனது நாய்க்கு பயிற்சி கொடுத்தால் என்ன என்று யோசித்தேன்.
அதேபோல் அதற்கு பயிற்சி கொடுத்தேன். எனது குழந்தை வீட்டுப்பாடம் எழுதும் போது நாய் கைகளை மேஜை மீது வைத்துக்கொண்டு நிற்கும். வீட்டுப்பாடம் முடிந்து நோட்டை மூடிவைத்த பின்பு தான் நாய் அந்த இடத்தை விட்டு நகரும்" என கூறியுள்ளார்.
வீட்டுப்பாடம் எழுதும்போது தனிமையில் இல்லாத உணர்வு கிடைக்கிறது என்கிறார் அந்த சுட்டிக்குழந்தை ஸின்யா. நமது ஊரில் நாய்களை வீடு, தோட்டக் காவலுக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில், மகளை கண்காணிக்க நாயை பயன்படுத்தும் தந்தையின் செயல் தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவருகிறது.