இந்தியா

பெற்ற மகளை, தந்தையே ஆற்றில் வீசிக்கொன்ற கோர சம்பவம்! காரணத்தை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

Summary:

father daughter river

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் ப்ரோ - ஜூனு தம்பதியினர். இவர்கள் ரிஷிகா என்ற 2 வயது மகள் உள்ளார். கடந்த சனிக்கிழமை தன் குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார் பீர்பால். 

ஆனால் வெளியே சென்ற பீர்பால் சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குத் தனியாக வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, குழந்தை எங்கே? என்று தன் கணவரிடம் கேட்டுள்ளார். 

அதற்கு பதிலளித்த அவரது கணவர் குழந்தையை அருகில் ஓடும் போர்லா ஆற்றில் விட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜூன் தன் உறவினர்களிடம் சொல்ல,உடனே அவர்கள் விரைந்து சென்று குழந்தையை ஆற்றில் தேடி யுள்ளனர் ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. 

river க்கான பட முடிவு

இதையடுத்து அருகில் உள்ள போலீசில் புகார் செய்துள்ளனர்.அதனை அடுத்து தீயணைப்பு துறையினர் வந்து தேடி, குழந்தையின் சடலத்தை மீட்டனர்.அதன் பின்னர் போலீசார் பீர்பாலை கைது செய்து விசாரித்தபோது, ''கடவுள் என் கனவில் வந்து இப்படி செய்யச் சொன்னார். அதனால் மகளை ஆற்றில் வீசினேன்'' என்று தெரிவித்துள்ளார். 

பெற்ற மகளை, தந்தையே ஆற்றில் வீசிக்கொன்ற கோர சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement