பேரதிர்ச்சி.. பல ஹிட் பாடல்களை கொடுத்த பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு.! கண்ணீரில் திரையுலகம்.!

பேரதிர்ச்சி.. பல ஹிட் பாடல்களை கொடுத்த பிரபல பாடகர் திடீர் உயிரிழப்பு.! கண்ணீரில் திரையுலகம்.!


famous-singer-kk-passed-away

இந்திய அளவில் பிரபலமான பின்னணி பாடகராக திகழ்ந்தவர் கிருஷ்ணகுமார் குன்னாத். கே.கே என்று அழைக்கப்படும் அவர் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால்  ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். அவர் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் என பல மொழித் திரைப்படங்களிலும் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். 

பாடகர் கிருஷ்ணகுமார் தமிழில் உயிரின் உயிரே, அண்டங்காக்கா கொண்டைக்காரி, அப்படி போடு போடு, காதல் வளர்த்தேன், வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அவர் இதுவரை 66க்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை பாடியுள்ளாராம்.

Kk

இந்த நிலையில் 54 வயது நிறைந்த அவர் நேற்று இரவு கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கேகே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் இந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.