சினிமா

பிரபல நடிகரின் மறைவுக்கு முதலமைச்சர் அஞ்சலி!. உறவினர்கள் கதறி அழுதனர்!.

Summary:

பிரபல நடிகரின் மறைவுக்கு முதலமைச்சர் அஞ்சலி!. உறவினர்கள் கதறி அழுதனர்!.


பிரபல மூத்த நடிகர் படல் தாஸ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அசாம் மொழி திரைப்படங்கள் பலவற்றில் கதாநாயகனாகவும், குணச்சித்தர நடிகராகவும் பல வேடங்களில் நடித்து மக்களிடையே பெரும் புகழை பெற்றியிருந்தவர் தாஸ்.

இவர் சில காலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட தாஸ் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தாஸின் உயிர் கடன்ஹா சனிக்கிழமை பிரிந்தது.

தாஸின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் திரையுலகினரும், குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதார்கள். அவரின் ரசிகர்களும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தனர்.

மறைந்த தாஸுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அவரின் மறைவுக்கு அசாம் முதல்வர் சர்பானந்தா சொனோவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement