ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு..! முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்ட தகவல்.!

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு..! முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்ட தகவல்.!


extension-of-lockdown-in-karnataka

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கு அமலில் உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு வருகிற 24-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


இதுகுறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா கூறுகையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாங்கள் இன்னும் விவாதித்து வருகிறோம். எப்படியிருந்தாலும், விதிக்கப்பட்ட ஊரடங்கு மே 24 வரை விதிக்கப்படும். இரண்டு-மூன்று நாட்களுக்குப் பிறகு, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து விவாதித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.