இந்தியா

நடு ரோடு..! கும் இருட்டு..! ஆடையின்றி நிர்வாணமாக திரிந்த இளம் பெண்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

Summary:

East African woman stripped naked and robbed at knife point

கிழக்கு ஆப்ரிக்க நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கிட்னி கல் அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத சிலரால் கொடுமை படுத்தப்பட்டு, உடைகள் அவிழ்க்கப்பட்டு நடுரோட்டில் நிர்வாணமாக தூக்கி எறியப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 16 ஆம் தேதி குறிப்பிட்ட பெண் இரவு நேரத்தில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த நிலையில் காரில் வந்த மூன்றுபேர் அவரிடம் இருந்த பணம், பொருட்களை பிடுங்கிக்கொண்டு, அவரது உடைகளையும் அவிழ்த்து அவரை நடுரோட்டில் நிர்வாணமாக விட்டுச்சென்றுள்ளன்னர்.

இதனை அடுத்து, இரவு நேரத்தில் நிர்வாணமாக நடந்து சென்று அருகில் இருந்த வீட்டில் உடைகளை வாங்கி அந்த பெண் அணிந்துள்ளார். மேலும், இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த பெண்ணின் புகாரை அடுத்து காரில் வந்த அந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.


Advertisement