விமான எரிபொருள் விலை உச்சம்.. உயருகிறது பயண கட்டணம்..! ஷாக்கில் விமான பயணிகள்.!

விமான எரிபொருள் விலை உச்சம்.. உயருகிறது பயண கட்டணம்..! ஷாக்கில் விமான பயணிகள்.!



due-to-flight-fuel-price-hike-flight-ticket-also-increa

உலகளவில் கொரோனாவின் 3 ஆவது அலைபரவல் தாக்கம் குறைந்து வரும் நிலையில், நான்காவது அலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மூன்றாவது அலை குறைந்ததையொட்டி பல நாடுகளும் சர்வதேச விமான போக்குவரத்து சேவையை தொடங்கி உள்ளன. 

இதனால் விமான சேவைக்கட்டணமும் உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், உக்ரைன் - ரஷியா போரின் காரணமாக பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் விலையும் உயர்ந்தது. 

flight

நடப்பாண்டில் 6 ஆவது முறையாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 18 % உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் கிலோ லிட்டரின் விலை ரூ.17,135 அதிகரிக்கப்ட்டு, ரூ.1,10,666 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வரலாற்றிலேயே ரூ.1 இலட்சத்தை கடந்து விமான எரிபொருள் விற்பனை செய்யப்படும் நிலையில், விமான பயணக்கட்டணமும் உயர்ந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் விமானத்திற்கான பயண கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.