கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் யூ-டியூபில் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய இளைஞர்..! அவருடைய 1 மாத வருமானம் எவ்வளவு தெரியுமா.?

கொரோனா ஊரடங்குக்கு மத்தியிலும் யூ-டியூபில் சம்பாதித்து ரோல்ஸ் ராய்ஸ் வாங்கிய இளைஞர்..! அவருடைய 1 மாத வருமானம் எவ்வளவு தெரியுமா.?


Dubai settled indian man buys rolls royce car through YouTube earnings

கொரோனா சமயத்திலும் யூ-டியூப் மூலம் கோடி கணக்கில் சம்பாதித்து இளைஞர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ள சம்பவம் வைரலாகிவருகிறது.

உலகமே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்துவருகிறது. இதனால் பலவிதமான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும், இந்த சமயத்திலும் பல லட்சங்கள் சம்பாதிக்கும் சாதனையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையை சேர்ந்தவர்தான் இந்தியாவில் பிறந்து துபாயில் செட்டிலான இளைஞர் கவுரவ் சவுத்ரி.

யூ டியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் கவுரவ் சவுத்ரி புதிய மொபைல்கள் சந்தைக்கு வரும்  அன்றே அந்த போன் குறித்த விமர்சனங்களை தனது யூ டியூப் சேனல் மூலம் வெளியிட்டுவருகிறார். இவரின் விமர்சனங்களை கேட்க பலலட்சம் பேர் உள்ளனர். இதுவரை இவரது சேனலை 35 லட்சம் சந்தாதாரர்கள் பின்தொடர்கின்றனர்.

இதன் மூலம் மாதம் 20 லட்சம் ரூபாய் வரை கவுரவ் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யூ டியூபில் சம்பாதித்த பணத்தை வைத்து சொந்தமாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார் கவுரவ் . அதிலும் காரில் தனக்கான மாறுதல்களையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் கேட்டு பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.