இந்தியா

உச்சகட்ட போதை! நல்ல பாம்பிற்கு முத்தம் கொடுக்க சென்ற நபர்! பாம்பின் உச்சகட்ட கோவம்!

Summary:

drunk man try to kiss snake

கர்நாடகா மாநிலத்தில் பத்ராவதி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து பயந்துபோன குடியிருப்புவாசிகள் உடனடியாக பாம்புப்பிடிக்கும் சோனு என்ற நபருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்தநிலையில் மதுபோதையில் அங்கு வந்த சோனு, பாம்பை எளிதாக பிடிக்காமல். வித்தைக்காட்டும் நோக்கிலும், பொதுமக்களிடம் கெத்துகாட்டும் வங்கியிலும்  பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார்.

சோனு செய்த செயல்களை பார்த்து கோபமடைந்த அந்த விஷப்பாம்பு திடீரென சோனுவின் உதட்டை கடித்துவிட்டு தப்ப முயன்றது. ஆனாலும் சோனு விரட்டிச்சென்று அந்த பாம்பை பிடித்துள்ளார். பாம்பு சோனு வாயை கடித்ததால் வாயில் இருந்து இரத்தம் வெளியேற ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து சோனு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Advertisement