திருமணம் செய்ய தகராறு, செய்த காதலி; ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

திருமணம் செய்ய தகராறு, செய்த காதலி; ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!


Dispute to marry, committed girl friend; Teenager killed in rage.. Shocking incident..

திருமணம் குறித்து ஏற்பட்ட தகராறில் 20 வயது பெண்ணை கொலை செய்தவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திருமணம் குறித்து நடந்த சண்டையில் 20 வயது பெண்ணை கொலை செய்தவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி அங்கிதா எஸ் ஷிவ்கன் என்ற பெண் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் இருக்கும் அவரது வீட்டில் இருந்து காணாமல் போனார். 

சில நாட்களுக்குப் பின்னர் மும்பையின் புறநகர்ப் பகுதியில் இருக்கும் பயந்தரில் உள்ள உத்தான் மரைன் காவல் நிலைய எல்லையில் அவரது உடல் கிடைத்தது. அப்பொழுது அவரது செல்போன் அழைப்புகளை சோதனை செய்ததில், விரார் பகுதியைச் இருக்கும் அவரது ஆண் நண்பர் அபிஷேக் சர்பரே என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அபிஷேக், அங்கிதாவை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். 

திருமணம் பற்றி அவர்கள் இருவருக்கும் பெரிய சண்டை நடந்துள்ளது. அங்கிதா அவரை மிரட்டி இருக்கிறார். அதனால் அபிஷேக் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ஜூலை 31 அன்று, இருவரும் பால்கர் மாவட்டத்தில் இருக்கும் பயந்தருக்குச் சென்றுள்ளனர். அங்கு அபிஷேக், அங்கிதாவை ரயில் பாலத்தில் இருந்து சிற்றோடைக்குள் அங்கிதாவை தள்ளி விட்டு கொலை செய்துள்ளார்.