நாட்டையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து! மீட்புபணிக்கு உதவிய மக்களுக்கு கம்பளி வழங்கி நன்றி கூறிய டிஜிபி!!

நாட்டையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து! மீட்புபணிக்கு உதவிய மக்களுக்கு கம்பளி வழங்கி நன்றி கூறிய டிஜிபி!!



dgp-thank-people-who-help-to-rescue-work-after-helicopt

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 இராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் கேப்டன் வருண் சிங் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் பெங்களூர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

helicopter

இந்த விபத்து நாட்டையே உலுக்கி பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து நடைபெற்றபோது, அந்த பகுதியில் உள்ள மக்கள் தீயை அணைப்பதற்கு தங்களது வீடுகளில் இருந்த கம்பளி, போர்வை, ஜமக்காளம் ஆகியவற்றைக் கொடுத்து மீட்புப்பணிகளுக்கு பேருதவியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற சமயத்தில் நஞ்சப்பசத்திரம் பகுதி மக்கள் செய்த சேவை பாராட்டத்தக்கது. அவர்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார். மேலும் போர்வை, கம்பளி கொடுத்து உதவிய அப்பகுதி மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு கம்பளி கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார்.