ஏசிபி துப்பாக்கியால் சுட்டுத்தற்கொலை: மனைவி இறந்த துக்கத்தில் இருந்தவரின் விபரீத முடிவு.!Delhi Southwest ACP Anil Kumar Suicide 

 

டெல்லியில் உள்ள தென்மேற்கு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் அணில் குமார் சிசோடியா. 

இவரின் மனைவி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்நிலையில், துக்கத்தில் இருந்து வந்த அணில் குமார் சிசோடிவியா, நேற்று இரவில் திடீரென தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தனது கைத்துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.